பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

  • Share this:
    நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 30ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    நாடாளுமன்றத்தில், காலை 9 மணிமுதல் 1 மணி வரை மாநிலங்களவை கூட்டத் தொடரும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மக்களவை கூட்டத்தொடரும் நடைபெற இருக்கின்றது.

    மேலும் படிக்க... 29ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்: பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்

    இந்த கூட்டத்தொடரில் கேள்விநேரம் மற்றும் பூஜ்ஜியம் நேர விவாதத்திற்கு (ஜீரோ ஹவர்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். அதன்படி வரும் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதேபோல் அன்றைய தினம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டமும் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: