ஹோம் /நியூஸ் /இந்தியா /

தொடக்கப் பள்ளிக்கு காலவரையின்றி விடுமுறை - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவு

தொடக்கப் பள்ளிக்கு காலவரையின்றி விடுமுறை - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவு

டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை

5 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்தாலும், விளையாட்டு வகுப்பு போன்ற வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லியில் காற்று மாசு பிரச்னை தீவிரமடைந்துள்ளதால் மாநில முழுவதும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆம் ஆத்மி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்னை கடந்த சில நாள்களாக மிக மோசமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீட்டு எண் 450ஐ தொட்டுள்ளது. இதனால் காற்று மிக மோசமான நச்சுத்தன்மையை எட்டியுள்ளது.குறிப்பாக, நொய்டா பகுதியில் காற்றின் தரம் மிக மோசமாகியுள்ளதால், அங்கு 8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க மாவட்ட நிர்வாகம் இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளது.

  இந்த உத்தரவு வெளியான அடுத்த சில மணிநேரத்திலேயே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்னும் உடன் இருந்தார். டெல்லி மிகமோசமான காற்று மாசு பிரச்னையை சந்தித்து வருகிறது. இந்த பிரச்னைக்கு டெல்லி, பஞ்சாப் மாநிலங்கள் மட்டும் பொறுப்பல்ல. இது ஒட்டுமொத்த வட மாநிலங்களின் பிரச்னையாகும்.

  எனவே, காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மூடப்படும். காற்றுதரம் மேம்படும் வரை 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். 5 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்தாலும், விளையாட்டு வகுப்பு போன்ற வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது. " இவ்வாறு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறினார்.

  இதையும் படிங்க: இந்தியாவில் கடந்த ஓராண்டில் 20,000 பள்ளிகள் மூடல்.. கல்வி அமைச்சகம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  பொதுவாக குளிர் காலங்களில் டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை, வாகனப்புகை, தொழிற்சாலை புகை போன்றவை காரணமாக காற்றின் தரம் மிக மோசமாகி வருகிறது. அக்டோபர் மாத காலத்தில் தொடங்கும் இந்த காற்று மாசு பாதிப்பு பிப்ரவரி வரை நீடித்து டெல்லி மக்களை பெரும் அவதிக்கு ஆளாக்குகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Aam Aadmi Party, Air pollution, Arvind Kejriwal, School, School Holiday