முகப்பு /செய்தி /இந்தியா / ஃபிராங்கோ முல்லகல் மீது குற்றம்சாட்டிய பாதிரியார் சடலமாக கண்டெடுப்பு

ஃபிராங்கோ முல்லகல் மீது குற்றம்சாட்டிய பாதிரியார் சடலமாக கண்டெடுப்பு

பாதிரியார் குரியகோஸ்

பாதிரியார் குரியகோஸ்

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செயப்பட்ட விவகாரத்தில் பிராங்கோ முல்லக்கல் மீது புகார் அளித்திருந்த பாதிரியார் குரியகோஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பிராங்கோ முல்லகல் மீது புகார் அளித்திருந்த பாதிரியார் குரியகோஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பேராயர் ஃபிராங்கோ முலக்கல் மீது கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். பேராயரை கைது செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அடுத்து, ஜலந்தர் பேராயராக இருந்த ஃபிராங்கோ முலக்கல் கோட்டயத்தில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் ஆஜரானார். மூன்று நாள் விசாரணைக்கு பின்னர் முலக்கல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, அவரை பேராயர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக வாடிகன் அறிவிப்பு வெளியிட்டது.

பிஷப் ஃபிராங்கோ முலக்கல்

கடந்த வாரம் முலக்கலுக்கு ஜாமின் வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரளாவுக்குள் நுழைய கூடாது, வெளிநாட்டுக்கு தப்பி செல்ல கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. முலக்கல் மீது புகார் அளித்தவர்களில் முக்கியமானவர் பாதிரியார் குரியகோஸ். ஜலந்தர் மறைமாவட்ட திருச்சபையின் கீழ் பணியாற்றி வந்த அவர் இன்று காலை போக்பூரில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக குரியகோஸ் தொடர்ந்து கூறி வந்ததாகவும், அவர் மரணத்துக்கு பின்னணியில் பெரிய சதி இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும், பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே அவர் இறந்ததற்கான காரணம் தெரியும் என போக்பூர் போலீசார் கூறியுள்ளனர். பாதிரியார் குரியகோஸின் மரணம் இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO SEE...

First published:

Tags: Father Kuriakose, Franco Mulakkal, Kerala Nun Rape Case, Vatican