6 பயிர்களுக்கான ஆதார விலை உயர்வு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

கோதுமை, பருப்பு, கடுகு உள்ளிட்ட ஆறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

6 பயிர்களுக்கான ஆதார விலை உயர்வு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
நரேந்திர சிங் தோமர்
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 2:12 PM IST
  • Share this:
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு வேளாண் மசோதாக்களுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில், ராபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

அதன்படி, கோதுமை, பருப்பு, கடுகு, பார்லி உள்ளிட்ட 6 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோதுமை ஒரு குவிண்டாலுக்கு 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு 1975 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோதுமை விவசாயிகளுக்கு இந்தாண்டு அதிகபட்ச லாபம் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்லி ஒரு குவிண்டாலுக்கு 75 ரூபாயும், கடுகு ஒரு குவிண்டாலுக்கு 225 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் சன்னா பருப்பும், குவிண்டாலுக்கு 225 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க...கடன் தொகை: 2 ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் - எஸ்.பி.ஐ வங்கி..விவசாயிகளுக்கு கடந்த 6 ஆண்டுகளில், குறைந்தபட்ச ஆதார விலையாக ஏழு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இது காங்கிரஸ் ஆட்சி காலமான 2009-இல் இருந்து 2014 வரை வழங்கப்பட்ட தொகையை விட இருமடங்கு அதிகம் என சுட்டிக்காட்டினார்.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading