காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் போலியானவை..! ரபேல் விவகாரத்தில் அருண் ஜெட்லி ஆவேசம்

அருண் ஜெட்லி

போர் விமானத்தின் தேவை குறித்தோ, அதன் தரம் குறித்தோ எந்த சந்தேகமும் இல்லை. முழுமையான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு, ‘போர் விமானத்தின் தேவை குறித்தோ, அதன் தரம் குறித்தோ எந்த சந்தேகமும் இல்லை. முழுமையான விசாரணை தேவையில்லை' என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதற்கு எதிராகப் பேசியவர்கள் அனைத்து இடத்திலும் வகையிலும் தோல்வியடைந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. ரபேல் தொடர்பாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது. அவர்களுடைய போலியான குற்றச்சாட்டுகளே, அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடும். பிரான்ஸ் நாட்டு நிறுவனம்தான் அவர்களுக்குரிய பார்ட்னரை தேர்வு செய்தது.

ரபேல் ஒப்பந்தம், தேசியப் பாதுகாப்பு, இந்தியாவின் வணிகம் ஆகிய இரு தரப்பையும் பாதுகாத்தது. ரபேல் தொடர்பான குற்றச்சாட்டுகள் கற்பனையானவை. மத்திய அரசு வெளியிட்ட அனைத்து தரவுகளும் உண்மையானவை. ராகுல் காந்தி தெரிவித்த அனைத்து தரவுகளும் போலியானவை. உண்மைக்கு எப்போதும் ஒரே ஒரு வடிவம்தான். பொய்கள்தான் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும். அதனால், ராகுல் காந்தி பல்வேறு தரவுகளை முன்வைக்கிறார்’ என்று குற்றம்சாட்டினார்.

 
Published by:Karthick S
First published: