Home /News /national /

குடியரசுத் தலைவர் தேர்தல் பொது வேட்பாளர் தொடர்பாக சரத் பாவருடன் மம்தா முக்கிய ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தல் பொது வேட்பாளர் தொடர்பாக சரத் பாவருடன் மம்தா முக்கிய ஆலோசனை

சரத் பவார் மற்றும் மம்தா பானர்ஜி சந்திப்பு

சரத் பவார் மற்றும் மம்தா பானர்ஜி சந்திப்பு

நாளை நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

    குடியரசு தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், வேட்பாளரை தேர்வு செய்வதில் மத்தியில் ஆளும் பாஜகவும், அதற்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.

    பாஜகவுக்கு சவால் விடுக்கும் விதமாக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் குரல் ஒலித்து வரும் நிலையில், இதற்கான முதல் குரலை தந்தவர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. பொது வேட்பாளரை நிறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும், இது தொடர்பாக ஜூன் 15 ஆம் தேதி (நாளை)நடத்த வேண்டும் என மம்தா பானர்ஜி காங்கிரஸ் தொடங்கி அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, தலைநகர் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் சரத் பவாரை மம்தா பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது ட்விட்டர் பதவில், 'செல்வி மம்தா பானர்ஜி என்னை டெல்லி இல்லத்தில் சந்தித்தார். நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசித்தோம்' என்றார்.

    குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த மம்தா அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: 10ஆம் வகுப்பில் ஆங்கிலம், கணிதத்தில் ஜஸ்ட் பாஸ் - வைராலகும் சாதனை ஐஏஎஸ் அதிகாரியின் மார்க் ஷீட்

    காங்கிரஸ் கட்சியும் தனது மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இந்த கூட்டத்திற்கு அனுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது. சரத் பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக மம்தா நிறுத்த விரும்புவதாகவும், இதற்கு சரத் பவார் ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மம்தாவின் பொது வேட்பாளர் கருத்துக்கு ஆரம்பத்திலேயே இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Mamata banerjee, President

    அடுத்த செய்தி