முகப்பு /செய்தி /இந்தியா / குடியரசுத் தலைவர் தேர்தலில் 53 ஓட்டுகள் செல்லாதவை.. தமிழ்நாட்டில் விழுந்த ஒரு செல்லா ஓட்டு யாருடையது?

குடியரசுத் தலைவர் தேர்தலில் 53 ஓட்டுகள் செல்லாதவை.. தமிழ்நாட்டில் விழுந்த ஒரு செல்லா ஓட்டு யாருடையது?

குடியரசுத் தலைவர் தேர்தலில் 53 ஓட்டுகள் செல்லாதவை

குடியரசுத் தலைவர் தேர்தலில் 53 ஓட்டுகள் செல்லாதவை

தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தமுள்ள 234 எம்எல்ஏக்களில் ஆளும் திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் 159 பேரும், அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் 75 பேரும் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டின் 15 குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.இந்திய தேர்தல் ஆணையம் நேற்று இரவு தேர்தல் முடிவுகள் அதன் புள்ளி விவரங்களை முழுமையாக வெளியிட்டன.

அதன்படி, எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆதரவின்படி பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு 6,76,803 மதிப்பிலான வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 3,80,177 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்.அதேபோல் தேர்தலில் மொத்தம் 53 உறுப்பினர்கள் தங்களின் வாக்குகளை தவறுதலாக செலுத்தியதால், அவர்களின் ஓட்டு செல்லவில்லை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் பதிவான 53 செல்லா ஓட்டுகளில் 28 ஓட்டுக்கள் எம்பிக்களும் மீதமுள்ள செல்லா ஓட்டுகளை மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்களும் செலுத்தியுள்ளனர்.

அதிகபட்சமாக பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஐந்து எம்எல்ஏக்களும், மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 4 எம்எல்ஏக்களும் செல்லா ஓட்டுகளை செலுத்தியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் மூவரும், அசாமில் இருவரும், உத்தரகாண்ட், தெலங்கானா, மேகாலயா, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகியவற்றில் தலா ஒரு எம்எல்ஏவும் செல்லா வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தமுள்ள 234 எம்எல்ஏக்களில் ஆளும் திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் 159 பேரும், அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் 75 பேரும் உள்ளனர். திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் மற்ற இதர எம்எல்ஏக்கள் அனைவரும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். அதேபோல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக, பாமக, இதர எம்எல்ஏக்கள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.1 கோடி செலவு.. 26 மணிநேர பயணம் - அமெரிக்காவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பெண்

தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி ஆதரவு வேட்பாளருக்கு அக்கூட்டணி எம்எல்ஏக்கள் 75 பேரின் வாக்குகளும் கிடைத்துள்ளன. அதேவேளை, யஷ்வந்த் சின்ஹாவுக்கு திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் 159க்கு பதிலாக 158 பேரின் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. எனவே, தமிழ்நாட்டில் பதிவான ஒரு செல்லா ஓட்டு திமுக கூட்டணி எம்எல்ஏ இடம் இருந்தே பதிவாகியுள்ளதாக யூகிக்கப்படுகிறது.

First published:

Tags: Draupadi Murmu, President Droupadi Murmu, President Election, Yashwant Sinha