Home /News /national /

President Election 2022 | குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு

President Election 2022 | குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு

President Election 2022 | குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

    நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவர் தேர்வுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்தது.டெல்லியில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிந்து வாக்கு பெட்டிகள் நாடாளுமன்றம் வளாகம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 727 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 9 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். ஆனால், 719 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 9 சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்.

    நாடாளுமன்றத்தில் உள்ள அறை எண் 73இல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது நாடாளுமன்றத்தின் செயலாளர், வேட்பாளரின் பிரதிநிதி ஒருவர் மற்றும் உதவியாளர்கள் உடனிருப்பர் . வாக்கு எண்ணிக்கையின் போது இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதி வழங்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.



    குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையில் 2-வது சுற்று வரை முன்னிலையில் இருந்த திரௌபதி முர்மு 3-வது சுற்றில் 50 சதவீத வாக்குகளை கடந்தார். மொத்தமாக திரௌபதி முர்மு 5,77,777 வாக்குகளையும் எதிர்கட்சிகள் வேட்பாளர் யஷ்வந்த சின்ஹா 2,61,062 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசு தலைவராகி உள்ளார் என்ற வரலாற்று பெருமையை திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: President Droupadi Murmu

    அடுத்த செய்தி