நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு!

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அவரது படம் திறக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

news18
Updated: February 12, 2019, 12:18 PM IST
நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு!
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்
news18
Updated: February 12, 2019, 12:18 PM IST
நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் உருவ படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது 93வது வயதில் காலமானார். அவரை கவுரவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அவரது படம் திறக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

Also read... வாஜ்பாய் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை! - டைம்லைன்

அதன்படி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் திருவுருவப் படத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்து, மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் பங்கேற்றனர்.

Also see... பன்முகத்தன்மை கொண்ட வாஜ்பாய் - புகைப்படத் தொகுப்பு

Also see...

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...