Home /News /national /

பிபின் ராவத் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப இயலாது : குடியரசு தலைவர்

பிபின் ராவத் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப இயலாது : குடியரசு தலைவர்

நாட்டில் இப்போதுள்ள சவால்களையும், நவீன கால அச்சுறுத்தல்களையும் சமாளிக்க இளம் வீரர்களின் உடல் நலமும், மன வளமும் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தை பாராட்டிப் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று புகழாரம் சூட்டினார்.

    குன்னூரில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் கடந்த புதன் அன்று உயிரிழந்தனர். நேற்று அவர்களது உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிபின் ராவத் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தராகண்ட மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பார்வையிட்டார்.

    அப்போது பேசிய அவர், ‘முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் அகால மறைவால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து நாடு இன்னும் மீளாத நிலையில், நாம் இங்கு கூடியுள்ளோம். உத்தரகாண்ட் அவரது சொந்த மாநிலம். இந்திய ராணுவ அகாடமியில் அவர் பயிற்சி பெற்றார். அவரது திறமைக்காக அவருக்கு இங்கு ஸ்வோர்ட் ஆப் ஹானர் எனப்படும் விருது வாள் வழங்கப்பட்டது. இந்த சோகமான சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால், இன்று நம்மிடையே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார்.

    Also Read : ஹெலிகாப்டர் விபத்து: மீட்பு பணியில் உதவிய உள்ளூர் மக்கள், தமிழக அரசுக்கு இந்திய விமானப் படை நன்றி

    இந்திய ராணுவ பயிற்சி மையத்திற்கு அவர் பெருமை சேர்த்தார். அவருக்கு முன்பு பீல்டு மார்ஷல் கே.எம். கரியப்பா, பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா மற்றும் பல அசாதாரணமான வீரர்கள் ராணுவத்தினருக்கு முன்னோடியாக உள்ளனர். அவர்களில் சிலர் தங்களது உயிரை நாட்டின் பாதுகாப்புக்காக தியாகம் செய்துள்ளனர். இங்கு பயிற்சியை நிறைவு செய்து, பணியில் ஈடுபடவுள்ள இளம் வீரர்கள் இந்த அகாடமியின் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

    நாட்டில் இப்போதுள்ள சவால்களையும், நவீன கால அச்சுறுத்தல்களையும் சமாளிக்க இளம் வீரர்களின் உடல் நலமும், மன வளமும் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்.

    Also Read : இந்தியாவில் முகக்கவசம் அணிவது குறைந்துவிட்டது: எச்சரிக்கும் மத்திய அரசு!
     ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், இலங்கை, தஜிகிஸ்தான், தான்சானியா, துர்க்மெனிஸ்தான், வியட்னாம் போன்ற நட்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான அதிகாரிகளை நட்பு நாடுகளுக்கு வழங்குவதன் மூலம், நமது நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுப்படும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Army Chief General Bipin Rawat, President

    அடுத்த செய்தி