முகப்பு /செய்தி /இந்தியா / ’புத்தாண்டு மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டுவரட்டும்’ - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

’புத்தாண்டு மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டுவரட்டும்’ - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

புத்தாண்டு மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டுவரட்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டு, மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ள அவர், பிறக்கும் புத்தாண்டில் அமைதியான, அக்கறையான, கருணையான சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து அதை எதிர்கொள்ளவேண்டும் என்றும் வேற்றுமையில் ஒற்றுமை எனும் நம் கலாச்சார விழுமியங்களை வலுப்படுத்தும் நேரம் இது என்றும் கூறிய ராம்நாத் கோவிந்த், வலிமையான, வளமையான இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பிப்பதற்கும் இதுவே தக்க தருணம் என்றும் வாழ்த்தியுள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

top videos
    First published:

    Tags: New Year 2021, President Ramnath Govind