200 பேரின் இறுதிச் சடங்குக்கு உதவி, கொரோனாவால் உயிரிழந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ரூ.2 லட்சம் நிதி

ஆறு மாத காலமாக, கொரோனாவால் உயிரிழந்த 200-க்கும் மேற்பட்டவர்களின் இறுதிச் சடங்கிற்கு உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி உதவியுள்ளார்.

200 பேரின் இறுதிச் சடங்குக்கு உதவி, கொரோனாவால் உயிரிழந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ரூ.2 லட்சம் நிதி
ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பத்துக்கு நிதியுதவி
  • Share this:
இந்தியாவில் மார்ச் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியது. அப்போதிலிருந்து சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்கு வேலைப் பளு இரண்டு மடங்காக அதிகரித்தது. வடகிழக்கு டெல்லியின் சீலம்பூரில் வசித்துவந்தவர் ஆரிஃப் கான். கொரோனாவில் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு உடல்களை எடுத்து செல்லுதல், பண உதவி செய்தல் போன்ற வேலைகளை தனது முழுநேரப் பணியாக கொண்டு செயல்பட்டார். இவர் கடந்த மார்ச் முதல், ஆறு மாதகாலமாகத் தன் வீட்டிலிருந்து 28 கி.மீ தொலைவில், அவருடைய ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துமிடத்திலேயே இரவு பகலாக படுத்துறங்கினார். 24 × 7 என உழைக்கத் தொடங்கிய ஆரிஃப் கான், தொலைபேசியில் மட்டுமே அவரின் மனைவி, குழந்தைகளுடனான தொடர்பைக் கொண்டிருந்தார்.

இப்படி ஆறு மாத காலத்தில் கிட்டத்தட்ட 200 நோயாளிகளின் உடல்களை இவரின் ஆம்புலன்ஸ் வாகனம் சுமந்திருக்கிறது. இந்தநிலையில் 48 வயதான ஆரிஃப் கான், திடீர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், டெல்லியிலுள்ள இந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தவர், அக்டோபர் 10-ம் தேதி உயிரிழந்தார்.

அவர், உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் செய்திகளில் இடம்பிடித்தது. நாட்டிலுள்ள பெரும்பாலான முன்னணி செய்தி நிறுவனங்கள், அவருடைய சேவையைப் பாராட்டியும், ஆரிஃப் கான் உயிரிழப்பால் அவரது குடும்பம்படும் கஷ்டங்களையும் செய்திகளாக வெளியிட்டனர். ஊடகங்களில் வெளிவந்த செய்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் கவனத்துக்குச் சென்றது.


அதனையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சார்பாக, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார். ஆரிஃப் கானுக்கு, மனைவியும், இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading