Home /News /national /

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.... சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் வேண்டுகோள்

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.... சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் வேண்டுகோள்

குடியரசுத் தலைவர் உரை

குடியரசுத் தலைவர் உரை

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது என்று பல சந்தேகம் கொண்டவர்கள் நினைத்தனர். இந்தியாவின் வேரில் இருந்து ஜனநாயகம் ஊட்டப்பட்டுள்ளது என்பது அவர்களுக்கு தெரியாது

    இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில், நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவிலாக உள்ளது என தெரிவித்தார்.

    இந்தியாவின் 75வது சுந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர்,பாரம்பரியங்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் இந்தியாவின் அதிசயத்தை உலகம் பார்க்கிறது. மிகப்பெரிய மற்றும் மிகவும் துடிப்பான ஜனநாயக நாடு இந்தியா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தெரிந்த மற்றும் தெரியாத சுதந்திர போராளிகளின் பல தலைமுறை போராட்டத்தின் மூலம் நமது சுதந்திரக் கனவு நனவாகியது. அவர்கள் அனைவரும் தியாகம் மற்றும் தியாகத்தின் தனித்துவமான உதாரணங்களை அமைத்தனர். அந்த அழியாத போராளிகளின் புனித நினைவுக்கு நான் தலைவணங்குகிறேன்.

    இதையும் படிங்க: தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை டிவியில் பார்த்தோம்.. இப்போது நேரில் செல்கிறோம் - நீரஜ் சோப்ரா


    121 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு இந்தியா பதக்கங்களை பெற்றுள்ளது. நமது விளையாட்டு வீரர்கள் அவர்களின் சிறப்பான செயல்பாடு மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்’ என்று பாராட்டு தெரிவித்தார்.

    கொரோனா பெருந்தொற்று குறித்து பேசிய அவர், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா தாக்கம் காரணமாக சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்றின் பேரழிவு தாக்கத்தில் இருந்து நாம் வெளியேவரவில்லை. நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக்கொள்வதுடன் மற்றவர்களையும் போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

    இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது என்று பல சந்தேகம் கொண்டவர்கள் நினைத்தனர்.  இந்தியாவின் வேரில் இருந்து ஜனநாயகம் ஊட்டப்பட்டுள்ளது என்பது அவர்களுக்கு தெரியாது. நமது ஜனநாயகத்தின் கோவிலாக நாடாளுமன்றம் உள்ளது. விரைவில் புது கட்டிடத்திற்கு நமது நாடாளுமன்றம் மாறவுள்ளது அனைவருக்கும் பெருமையானது என கூறினார்.



    கடல் மட்டம் உயர்வு,  பனிமலைகள் உருகுதல் போன்றவற்றால் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மனித வாழ்வில் யதார்த்தமாகி விட்டது. பாரிஸ் பருவநிலை மாநாட்டுக்கு உடன்படும் இந்தியா, பருவநிலை மாற்றத்தை தடுக்க உறுதியளித்த பிற நாடுகளை விட அதிகமாகவே ஈடுபாடு காட்டி வருகிறது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

    மேலும் படிக்க: ஹைதியை புரட்டிப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 304 பேர் பலி


    முன்னதாக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர்களுடன் அவர் டீ விருந்தில் கலந்துகொண்டார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Independence day, President Ramnath Govind

    அடுத்த செய்தி