முகப்பு /செய்தி /இந்தியா / President Ram Nath Kovind : அப்துல் கலாமை பின்பற்றி பயணிக்கிறார் குடியசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

President Ram Nath Kovind : அப்துல் கலாமை பின்பற்றி பயணிக்கிறார் குடியசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

அப்துல் கலாமின் ரயில் பயணம் நடந்து 18 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை போல இந்நாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை டெல்லியில் இருந்து கான்பூருக்கு ரயிலில் செல்கிறார். அதற்காக தயாராகிறது ‘ஜனாதிபதி எக்ஸ்பிரஸ்’ ரயில்.

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், தனது பணிக்காலத்தின்போது கடந்த 2003ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி ஹர்னாட்டில் இருந்து பாட்னாவுக்கு ரயிலில் சென்றார். அப்துல் கலாமின் ரயில் பயணம் நடந்து 18 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வகையில் டெல்லியில் இருந்து ஜூன் 25 (நாளை) பகல் 1.30 மணியளவில் உத்தரபிரதேசத்தின் கான்பூருக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு 7 மணிக்கு அவர் கான்பூரை சென்று அடைகிறார். இந்த பயணத்துக்காக மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை கொண்ட ‘ஜனாதிபதி எக்ஸ்பிரஸ்’ உருவாக்கப்படுகிறது. இதில் 14 பெட்டிகள் இருக்கும் என கூறப்படுகின்றது.

இந்த சிறப்பு ரயிலில் குடியரசுத்தலைவர் தனது மனைவி மற்றும் குடியரசுத்தலைவர் மாளிகை ஊழியர்கள், ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்களுடன் பயணம் செய்கிறார். உத்தரபிரதேசத்தில் 4 நாட்கள் அவர் பயணம் மேற்கொள்கிறார். இதில் கான்பூரில் உள்ள தனது மூதாதையர் கிராமத்திற்கும், குடியரசுத்தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அவர் செல்கிறார்.

அதனைத் தொடர்ந்து, தனது சொந்த கிராமத்திற்கு 27ஆம் தேதி ரயில் மூலம் செல்வார் என கூறப்படுகின்றது. உத்தரபிரதேசத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு 28ஆம் தேதி மீண்டும் அவர் டெல்லி திரும்புகிறார்.

Must Read : மூன்று மாநிலங்களில் அதிகம் காணப்படும் டெல்டா பிளஸ் வைரஸ்: கவலையளிக்கக் கூடியதாக மத்திய அரசு அறிவிப்பு!

குடியரசுத்தலைவருக்கான இந்த சிறப்பு ரயிலில் ராம்நாத் கோவிந்துக்காக 7 நட்சத்திர வசதி மற்றும் குண்டு துளைக்காத வகையில் சிறப்பு பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2 படுக்கை அறை, ஒரு ஹால், 2 கழிவறைகள், தொலைக்காட்சி, வை-பை வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடியரசுத்தலைவரின் ரயில் பயணத்திற்கு மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தண்டவாள பாதுகாப்பு முதல் ரயில் நிலைய பாதுகாப்பு வரை அனைத்தும் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: APJ Abdul Kalam, President Ramnath Govind, Train