முகப்பு /செய்தி /இந்தியா / 4 நாள் பயணமாக உத்தரபிரதேசம் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

4 நாள் பயணமாக உத்தரபிரதேசம் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தலைவர்

குடியரசு தலைவர்

29ஆம் தேதி அயோத்தி ராம் லல்லா கோயிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு நடத்துகிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக நாளை (ஆகஸ்ட் 26) சிறப்பு ரயிலில் உத்தரபிரதேசம் செல்கிறார். அவர் அயோத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

ஜென்மாஸ்டமியை முன்னிட்டு வருகிற 29ஆம் தேதி அயோத்தி ராம் லல்லா கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு நடத்துகிறார். இதன் மூலம் இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்யும் முதல் குடியரசுத்தலைவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கட்டுமான பணிகளை பார்வையிடும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமாயண மேளாவை தொடங்கி வைக்கிறார்.

Must Read : மேகதாது அணை விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி பயணம்

அயோத்தியில் அவர் இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார். குறிப்பாக அனுமன் கார்கி கோவிலில் அவர் வழிபாடு நடத்த இருப்பதாகவும், கனக பவனை பார்வையிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: President Ramnath Govind