குடியரசுத் தலைவர் ஒப்புதல்... அமலுக்கு வந்தது முத்தலாக் தடைச் சட்டம்...!

முத்தலாக் தடை மசோதா சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 1, 2019, 9:29 AM IST
குடியரசுத் தலைவர் ஒப்புதல்... அமலுக்கு வந்தது முத்தலாக் தடைச் சட்டம்...!
சட்டமாகியது முத்தலாக் தடை மசோதா
Web Desk | news18
Updated: August 1, 2019, 9:29 AM IST
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி கணவர் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு மாற்றான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, அவசரச் சட்டம் காலாவதி ஆகிவிட்டதாகவும், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்


இந்த சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம்.

மேலும் கைது செய்யப்படும் நபருக்கு, அவரது மனைவியின் கருத்துக்களை கேட்டபிறகு ஜாமீன் வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

மேலும் படிக்க... அதிமுக ஆதரவோடு முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...