Home /News /national /

வேளாண் சட்ட ரத்து மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்

வேளாண் சட்ட ரத்து மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்

ராம்நாத் கோவிந்த்

ராம்நாத் கோவிந்த்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்ட ரத்து மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், 3 வேளாண் சட்டங்களும் அதிகாரப்பூர்வமாக ரத்தாயின.

    கடந்த ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து அந்த சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

    இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்ட ரத்து மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிறகு இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

    இதைத்தொடர்ந்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு மசோதா அனுப்பப்பட்டது. மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், 3 வேளாண் சட்டங்களும் அதிகாரப்பூர்வமாக ரத்தாயின.

    இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் அணி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் சுமார் 750 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது விவசாயிகள் இறந்ததற்காக பதிவுகள் அரசிடம் இல்லை. மேலும், விவசாயிகளுக்கு எதிராக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த பதிவுகளும் இல்லை எனவே, அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

    Must Read : கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் : சீரம் நிறுவனம் விண்ணப்பம்

    அமைச்சரின் இந்த பதிலுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Agricultural act, President Ramnath Govind

    அடுத்த செய்தி