Home /News /national /

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் கிராமத்திற்கே தற்போது தான் மின்சார வசதி

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் கிராமத்திற்கே தற்போது தான் மின்சார வசதி

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு

பூர்வீக கிராமம் உள்ள மாவட்டத்தில் மட்டும் 500 கிராமங்களுக்கு உரிய சாலை வசதி இல்லை, 1350 கிராமங்களுக்கு உரிய மின்சார வசதி இல்லை என அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி ஒடிசாவைச் சேர்ந்த திரௌபதி முர்மு என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவருக்கு மத்திய பாஜக கூட்டணி மட்டுமல்லாது ஒடிசாவின் பீஜு ஜனதாதளம், ஜெகன் மோகனின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பலரும் ஆதரவு தந்துள்ளனர்.

    இந்நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவின் பூர்வீக கிராமமான உபார்பேடா கிராமத்திற்கு முதன்முதலாக தற்போது முழு மின்சார வசதி கிடைத்துள்ளது. இந்த கிராமம் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் 3,500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், ஒரு பகுதிக்கு மின்வசதி கிடைத்தாலும் துங்கூர்சாஹி என்ற மற்றொரு பகுதி இத்தனை நாளாக இருளிலேயே மூழ்கியுள்ளது. குடியரசுத் தலைவர் வேட்பாளராக முர்மு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், அவசர அவசரமாக அங்கு மின் இணைப்புகள் பொருத்தப்படுகின்றன.

    இது தொடர்பாக அம்மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, 'எங்களுக்கு கிராமத்தினரை இருளில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்ததே இல்லை, ஆனால் அலுவல் ரீதியாக ஒப்புதல் கிடைக்க காலத் தாமதமாகிவிட்டது. மயூர்பஞ்ச் பகுதியின் உபார்பேடா கிராமம் முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் மின்சாரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.

    குடியரசுத் தலைவர் வேட்பாளராக முர்மு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது கிராமத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற போது தான் அங்கு 100 சதவீத மின்சார வசதி எட்டப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த கிராமத்தில் வசிக்கும் முர்முவின் உறவினர் ஒருவர் ' நாங்கள் நீண்ட காலமாக மின்வசதி கேட்டு கோரிக்கை வைத்தும், யாரும் இதற்கு செவி கொடுக்கவில்லை. மக்கள் மண்ணெண்ணெய் விளக்குகளை தான் இவ்வளவு நாள் பயன்படுத்தி வருகின்றனர். நம்மில் ஒருவர் தற்போது குடியரசுத் தலைவராகியுள்ளார் என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

    இதையும் படிங்க: 600க்கு 592 மதிப்பெண் வாங்கிய ஆட்டோ ஓட்டுநரின் மகன் - சக பயணியின் செயலால் குவியும் பாராட்டு

    இந்த மாவட்டத்தில் மட்டும் 500 கிராமங்களுக்கு உரிய சாலை வசதி இல்லை, 1350 கிராமங்களுக்கு உரிய மின்சார வசதி இல்லை என அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Draupadi Murmu, President

    அடுத்த செய்தி