அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நன்கொடை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ. 5 லட்சம் நன்கொடையை வெள்ளிக்கிழமையன்று அளித்துள்ளார்.

 • Share this:
  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ. 5 லட்சம் நன்கொடையை வெள்ளிக்கிழமையன்று அளித்துள்ளார்.

  இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி, உள்ளிட்ட குழுவினர் வருகை தந்தனர்.

  மத பேதங்கள் இல்லாமல் அனைத்து தரப்பிலிருந்தும் நன்கொடை பெறும் வி.எச்.பி.யின் முயற்சியின் ஒரு பகுதி இது என்று இந்த அமைப்பின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

  ராமர் கோயிலுக்காக நிதித் திரட்டும் பணி 5,25,000 கிராமங்களில் நடைபெறவுள்ளது. வசூல் செய்யப்படும் தொகை 48 மணி நேரத்துக்குள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று வி.எச்.பி கூறுகிறது.

  இன்று, அதாவது ஜனவரி 15ம் தேதி தொடங்கிய நன்கொடை வசூல் பணி பிப்ரவரி 27ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வி.எச்.பி. சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறும்போது, “ராம்நாத் கோவிந்த் நாட்டின் முதல் குடிமகன் அதனால் அவர் மூலம் இந்த நன்கொடை வசூல் பணியை தொடங்குகிறோம். அவர் ரூ.501,000 தொகை நன்கொடை அளித்துள்ளார்.

  அயோத்தியில் ராமர் கோயில் வளாக ஒட்டுமொத்த கட்டுமான செலவு ரூ.1,100 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கோயிலுக்கு மட்டும் ரூ.300-400 கோடி செலவு செய்யப்படவுள்ளது.

  மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: