கர்நாடகா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு

குடியரசு தலைவர்

ஹரியானாவின் ஆளுநராக இருந்த சத்யதேவ் நாராயண் ஆர்யா திரிபுரா ஆளுநராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

 • Share this:
  கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக தாவர் சந்த் கெலாட் நியமிக்கப்பட்டு உள்ளார்.

  ஹரி பாபு கம்பம்பதி மிசோரம் மாநில ஆளுநராகவும், மங்குபாய் சாகன்பாய் படேல் மத்திய பிரதேச ஆளுநராகவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.அதேபோல், இமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

  இதனிடையே, மிசோரம் மாநில ஆளுநராக இருந்த பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை கோவாவின் ஆளுநராகவும்,ஹரியானாவின் ஆளுநராக இருந்த சத்யதேவ் நாராயண் ஆர்யா திரிபுரா ஆளுநராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

  அதேபோல், திரிபுரா ஆளுநராக செயல்பட்டு வந்த ரமேஷ் பைசை ஜார்கண்டிற்கு மாற்றியும், இமாச்சல பிரதேசத்தின் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை ஹரியானாவின் ஆளுநராக நியமித்தும் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: