Home /News /national /

தந்தைக்கு மகனாற்றிய உதவி....! தேநீர் விருந்துக்கு அழைத்த குடியரசுத் தலைவர்

தந்தைக்கு மகனாற்றிய உதவி....! தேநீர் விருந்துக்கு அழைத்த குடியரசுத் தலைவர்

  • News18
  • Last Updated :
    ஒடிசா மதுப்புரா பகுதியைச் சேர்ந்த சிறுவன் வடிவமைத்துள்ள இயந்திரம் குடியரசுத் தலைவரை ஈர்த்ததால்தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார்.  

    ஒடிசா மாநிலம் மதுப்புரா பகுதியைச் சேர்ந்த பிப்லப் குமார் 7- வகுப்பு பயின்று வருகிறார். தனது தந்தையின் வேலைப்பளுவை குறைக்கும் விதமாக 10 ஆயிரம் ரூபாய் செலவில் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஒரே நேரத்தில் உழுதல், தண்ணீர் பாய்ச்சுதல், விதைகள் போடுவது என 6 பணிகளை செய்கிறது.

    இந்த இயந்திரம் பல விருதுகளை வென்றுள்ளதுடன், குடியரசுத் தலைவரின் மனதையும் வென்றுள்ளது. அதனால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறுவனை தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார்.

    தனது தந்தை வெயிலில் வேலை செய்வதை கண்டு அவரின் பாரத்தை குறைக்கவே இந்த கருவியை வடிவமைத்ததாக கூறுகிறார் பிப்லப் குமார்.

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Odisa

    அடுத்த செய்தி