ஹோம் /நியூஸ் /இந்தியா /

மதங்களும், மொழிகளும் நம்மை பிளவுபடுத்தவில்லை - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

மதங்களும், மொழிகளும் நம்மை பிளவுபடுத்தவில்லை - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

இந்திய குடியரசுத் தலைவர்

இந்திய குடியரசுத் தலைவர்

வருங்கால இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும் திரவுபதி முர்மு கூறினார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களும், மொழிகளும் நம்மை பிளவுபடுத்தாமல், ஒன்றிணைத்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். அப்போது, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் ஜனநாயக குடியரசாக வெற்றியடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.பல்வேறு விதமான மதங்களும், மொழிகளும் நம்மை பிளவுபடுத்தவில்லை, அதற்கு மாறாக ஒன்றிணைத்துள்ளதாகவும் திரவுபதி முர்மு கூறினார்.

அரசியலமைப்பை பின்பற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அதற்கு அம்பேத்கர் உள்ளளிட்ட பல ஆளுமைகள் நமக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது எனவும், தன்னிறைவு இந்தியா திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

வருங்கால இந்தியாவை வடிவமைக்க பெண்களே அதிக பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும் திரவுபதி முர்மு கூறினார்.  கொரோனா காலத்தில் மத்திய அரசின் கரீப் கல்யாண் திட்டம், எண்ணற்ற ஏழைகளுக்கு உதவிகரமாக இருந்ததாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்

First published:

Tags: President Droupadi Murmu, Republic day, Tamil News