கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு 27 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வழங்கப்பட்டதால் அவர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படாமல் காப்பாற்றப்பட்டதாக, உலக வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் பேசினார்.
ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பெரிய கனவுகளை நோக்கி செல்லும் நிலையான, தைரியமான அரசு நடைபெற்று வருகிறது என்றார்.
உலகமே இந்தியாவை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும், உலகிற்கே இந்தியா தீர்வளித்து வருவதாகவும் குடியரசுத் தலைவர் பெருமிதம் தெரிவித்தார்.
ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம்,11 கோடி ஏழை மக்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்த அவர், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே துல்லிய தாக்குதல் மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப்பிரிவு நீக்கம் ஆகியவை இந்த அரசின் முக்கிய முடிவுகள் என்றும்
300 வகையான திட்டங்கள் பயனாளிகளின் நேரடி வங்கிக்கணக்கில் செலுத்துவதன் மூலம் கொரோனா காலத்தில் 27 லட்சம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் கூறினார்.
ஏழை மக்களுக்காக 2014ம் ஆண்டுக்கு பிறகு ,தினந்தோறும் 55ஆயிரம் பேருக்கு சமையல் எரிவாயு உருளை இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், முத்ரா கடன் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 700 கோடி ரூபாய் விநியோகிக்கப்படுகிறது என்றும் நாட்டின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு உயர்ந்துள்ளதாக கூறியுள்ள குடியரசுத்தலைவர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 50 கோடி மக்களுக்கு 80ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமானதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாள்தோறும் இரண்டு புதிய கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் திரௌபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.