தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 47 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய குடியரசுத் தலைவர்

ராம்நாத் கோவிந்த்

தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

 • Share this:
  ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அணடு இந்தியா முழுவதிலும் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

  தமிழகத்தைச் நேர்ந்த திலீப் மற்றும் சரஸ்வதி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதை பெற்றனர். நாடு முழுவதிலும் இருந்து நல்லாசிரியர் விருது பெற்ற 47 பேரில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  Published by:Karthick S
  First published: