உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு மசோதா - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு,  உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு 3 பேரின் பெயர்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

Web Desk | news18-tamil
Updated: August 11, 2019, 5:51 PM IST
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு மசோதா - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை
Web Desk | news18-tamil
Updated: August 11, 2019, 5:51 PM IST
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 10% உயர்த்தும் மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. இதனை 33 ஆக உயர்த்துவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இந்த மசோதா அமலுக்கு வரும்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை விரைவில் 33 ஆக உயரும்.

அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு,  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு 3 பேரின் பெயர்களைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

அந்த பரிந்துரையின் படி, மத்திய அரசு முடிவெடுத்து 3 நீதிபதிகள் யார் என்று இறுதியாக அறிவிக்கும்.

Also watch:  யூடியூப்பில் வியூவ்ஸை அதிகரிக்க ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரா?

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...