முகப்பு /செய்தி /இந்தியா / ஜார்க்கண்ட் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்..!

ஜார்க்கண்ட் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்..!

சி.பி.ராதாகிருஷ்ணன்

சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், “ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு முறை கோவை தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அத்துடன் இவர் 2016 முதல் 2019 வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார்.

பாஜக மூத்த தலைவர்கள் மாநிலங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்படுவது புதிதல்ல. தமிழ்நாடு பாஜக தலைவர்களாக இருந்த தமிழிசை, இல.கணேசன் ஆகியோர் ஏற்கனவே ஆளுநர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CP Radhakrishnan, Governor