• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாடு தழுவிய என்.ஆர்.சி பட்டியலுக்கு தயாராகி வருகிறோம் - அமித்ஷா

நாடு தழுவிய என்.ஆர்.சி பட்டியலுக்கு தயாராகி வருகிறோம் - அமித்ஷா

அமித்ஷா

அமித்ஷா

  • News18
  • Last Updated :
  • Share this:
    அசாமில் கொண்டு வந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் போல, நாடு தழுவிய பட்டியலை தயாரிக்கும் பணிக்காக தயாராகி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நியூஸ் 18-க்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.

    அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியிட்ட நிலையில் பல லட்சம் மக்கள் இந்திய குடிமக்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டனர். அவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டவர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்கத்திலும் இந்த பட்டியல் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா கூறியிருந்த நிலையில், அம்மாநில அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் ஆகியோர் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்களுக்கு சிறப்பு சட்டங்கள் மூலம் குடியுரிமை வழங்கப்படும் என்றும் அமித்ஷா பேசியிருந்தார்.

    முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் என்று கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், நியூஸ் 18 குழுமத்தின் தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஸிக்கு உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அளித்த பேட்டியில், “சட்ட விரோதமாக இந்தியாவின் எந்த மூலையில் ஒருவர் குடியிருந்தாலும், அவர் வெளியேற்றப்படுவார்” என்று கூறியுள்ளார்.

    “நாடு தழுவிய என்.ஆர்.சி பட்டியல் தயாரிக்கும் பணிக்காக தயாராகி வருவதாக கூறிய அமித்ஷா, பெங்களூரு மற்றும் மஹாராஷ்டிராவில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: