ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண்களே முழுமையாக கையாளக்கூடிய மகளிர் வாக்குச்சாவடிகள் தயார்...

பெண்களே முழுமையாக கையாளக்கூடிய மகளிர் வாக்குச்சாவடிகள் தயார்...

பூர்வா கார்க்

பூர்வா கார்க்

புதுச்சேரியில் பெண்களே முழுமையாக கையாளக்கூடிய மகளிர் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  புதுச்சேரியில் பெண்களே முழுமையாக கையாளக்கூடிய மகளிர் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக, பூர்வா கார்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில், மகளிரே முழுமையாக கையாளக்கூடிய மகளிர் வாக்குச்சாவடிகளும் தயாராக இருக்கின்றன.

  கொரோனா காலத்தில் வாக்காளர்கள் பாதுகாப்புடன் வாக்களிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் வாக்களிக்க வருங்கள்.

  புதுச்சேரியில், 144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும் வர்த்தகம் செய்யவோ, வேலைக்கு செல்லவோ, அவரவர் குடும்ப விழாக்கள் நடத்தவோ தடையில்லை” என்று தெரிவித்தார்.

  தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கின்றது. அந்த வகையில், புதுச்சேரியில் 30 தொகுதிகளிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  இதற்காக, லாஸ்பேட்டை வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குபதிவு இயந்திரங்கள், அந்தந்த வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

  Must Read :  பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவுசெய்யும் - சத்யபிரதா சாகு

  அதன்படி, 1,558 வாக்குசாவடிகளுக்கு தேவையான 1,558 வாக்குபதிவு எந்திரமும், 1,558 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் (விவிபேட்) நாளை பயன்படுத்தப்பட உள்ளன. அத்துடன் கொரோனா தடுப்பு முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Election 2021, Puducherry Assembly Election 2021, Women