மோசமான பாதிப்பை எதிர்கொள்ள தயாராகுங்கள் - மகாராஷ்டிராவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மோசமான பாதிப்பை எதிர்கொள்ள தயாராகுங்கள் - மகாராஷ்டிராவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

கோப்பு படம்

வரும் நாள்களில் மிக மோசமான கொரோனா பாதிப்புக்கு தயாராக இருக்கவேண்டும் என்று மகாராஷ்டிராவுக்கு மத்திய அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கிய நிலையில் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தநிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனாவின் பாதிப்பு கட்டுங்கடங்காமல் உள்ளது. இந்தியாவில் பதிவாகும் மொத்த கொரோனா எண்ணிக்கையில் மகாராஷ்டிராவில் மட்டும் 54 சதவீதம் பதிவாகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் முதல் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளது.

  இந்தியாவில் மொத்தமாக 24,000 பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் 15,000 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கைவிடுத்து கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ‘மகாராஷ்டிரா, தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தொடக்கத்தில் உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டறிவது, கொரோனா சோதனை செய்வது, தனிமைப்படுத்தப்படுதல் போன்றவை சிறப்பாக செய்யப்படவில்லை.

  மகாராஷ்டிராவின் நகர்புற மற்றும் கிராமப் புற பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. மிக அதிக அளவிலான கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராகவேண்டும்’ என்று எச்சரிக்கைவிடுத்துள்ளது.  உடனடி செய்தி இணைந்திருங்கள்...
  Published by:Karthick S
  First published: