ஹோம் /நியூஸ் /இந்தியா /

2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வங்கதேசத்திற்கு ரயில் சேவை தொடக்கம் - புதிய சேவையின் விவரம் இதோ

2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வங்கதேசத்திற்கு ரயில் சேவை தொடக்கம் - புதிய சேவையின் விவரம் இதோ

வங்கதேசத்துடன் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

வங்கதேசத்துடன் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

மேற்கு வங்கத்தின் புதிய ஜல்பய்குரி ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்தின் சிலிகுரி ரயில் நிலையம் வரை பயணிக்கும் புதிய ரயில் சேவை ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்தியா - வங்கதேசம் இடையே இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரயில் சேவை தொடங்கி உள்ளது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்தின் குல்னா வரை செல்லும் பந்தன் விரைவு ரயில் சேவை இன்று காலை 7.10 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டது. அத்துடன் மேற்கு வங்கத்தின் புதிய ஜல்பய்குரி ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்தின் சிலிகுரி ரயில் நிலையம் வரை பயணிக்கும் புதிய ரயில் சேவை ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ரயிலுக்கு மிதாலி எக்ஸ்பிரெஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

  மொத்தம் 595 கிமீ தூரம் பயணிக்கும் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து 1ஆம் தேதி முதல் வழக்கமான சேவை தொடங்கும். மொத்தம் உள்ள 595 கிமீ தூரத்தில் 69 கிமீ தூரம் இந்தியாவிலும் மீதமுள்ள தூரம் வங்கதேசத்திலும் உள்ளது. காலை 11.45 மணிக்கு மேற்கு வங்கத்தில் புறப்படும் இந்த ரயில் இரவு 10.30 மணிக்கு வங்கதேசம் சென்றடையும்.

  இந்தியா எல்லையின் கடைசி ரயில் நிலையமான ஹல்திபாரியிலும், வங்கதேச எல்லையின் முதல் ரயில் நிலையமான சிலாஹதியிலும் தல 10 நிமிடம் இந்த ரயில் நிற்கும். இந்த ரயில் நிலையங்களில் ஓட்டுநர்கள் மாற்றப்படுவார்கள். இந்த ரயில் நிலையங்களைத் தவிர வேறு எங்கும் இந்த ரயில் நிற்காது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மற்றும் வங்கதேச ரயில்வே அமைச்சர் நுருல் இஸ்லாம் சுஜான் ஆகியோர் இந்த ரயில் சேவையை காணொலி வாயிலாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளனர்.

  இதையும் படிங்க: அடிதூள்! இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை ஆக்டிவேட் செய்ய இதை செய்தால் போதும்..

  2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட் காரணமாக இரு நாட்டு ரயில் சேவையும் முடக்கப்பட்ட நிலையில், பெருந்தொற்று பரவல் தணிந்துள்ளதால் சேவை மீண்டும் தற்போது தொடங்கியுள்ளது. வங்கதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மேற்கு வங்க மாநிலத்திற்கு குறிப்பாக டார்ஜிலிங் மலைக்கு சுற்றுலா வருவார்கள் என்பதால் இந்த ரயில் சேவை தொடக்கம் இரு நாடுகளின் சுற்றுலாத்துறைக்கும் புத்துணர்ச்சி தரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Indian Railways, Train