ஆந்திரப் பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ராப்பள்ளே ரயில் நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
இது தொடர்பாக, பாபட்லா காவல் கண்காணிப்பாளர் வாகுல் ஜிந்தால் கூறியதாவது, அம்மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் தம்பதி குன்டூரில் இருந்து கிளம்பிய ரயிலில் ராப்பள்ளே ரயில் நிலையத்திற்கு ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் வந்துள்ளனர்.
இவர்கள் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பார்மில் படுத்து தூங்கிக்கொண்டு இருக்கையில், மூன்று பேர் அருகே வந்து கணவரை எழுப்பி மணி என்ன எனக் கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் கடிகாரம் இல்லை என பதில் கூறிய நிலையில், மூவரும் அந்த கணவரை அடித்து அவரிடம் இருந்த ரூ.750 பணத்தை பிடுங்கியுள்ளனர்.
பின்னர் அவரின் கர்ப்பிணி மனைவியையும் தாக்கி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.கணவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி அருகே இருந்த காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி உதவி கேட்டுள்ளார். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்,குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி சிறுமி, ஆறு மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - டெல்லியில் கொடூரம்
பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் மோப்ப நாய், அங்கிருந்த சிசிடிவி உதவியுடன் குற்றச் செயலில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவான சிறார் ஆவார். அந்த சிறார் மீது ஏற்கனவே மூன்று திருட்டு வழக்கு உள்ளது.குற்றச்செயலில் ஈடுபட்ட மூவர் மீது கூட்டு பாலியல் வன்புணர்வு, திருட்டு மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் வி பத்மா கண்டனத்தையும் கவலையும் தெரிவித்துள்ளார். காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக ஆணையத்திடம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட பத்மா, பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சென்று பார்க்கவுள்ளார்.
இதையும் படிங்க: 3 ஸ்டேட் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கில்லாடி லேடி.. ஒரே பாணியில் நூதன திருட்டு - புதுச்சேரியில் சிக்கிய பட்டதாரி பெண்
இந்நிலையில், மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவதாகவும், குற்றத்திற்கு விரைவில் நீதி பெற்றுத் தரப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra woman, Crime News, Gang rape