முகப்பு /செய்தி /இந்தியா / கர்ப்பிணி வனத்துறை அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு கொடூர தாக்குதல் - வீடியோ

கர்ப்பிணி வனத்துறை அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு கொடூர தாக்குதல் - வீடியோ

Viral Video

Viral Video

தாக்குதலுக்கு ஆளான பெண் வனத்துறை அதிகாரியின் கணவரும் வனத்துறையில் காவலராக பணிபுரிந்து வருவதாகவும், அந்த தம்பதியர் தனது கணவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலுக்கு ஆளான பெண் அதிகாரி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கர்ப்பிணியான பெண் வனத்துறை அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு தம்பதியர் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள பல்சவாடே எனும் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் தான் அந்த அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. சத்தாரா மாவட்ட வனத்துறையில் ரேஞ்சராக பணியாற்றி வரும் பெண் அதிகாரியை, பல்சவாடே கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவரும், அவரது மனைவியும் சேர்ந்து கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

தாக்குதலுக்கு ஆளான பெண் வனத்துறை அதிகாரி மூன்று மாத கர்ப்பமாக இருப்பவர். கர்ப்பிணி என்றும் பாராத அந்த தம்பதியர் இருவரும் சேர்ந்து கொண்டு அந்த வனத்துறை அதிகாரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு காலால் எட்டி உதைத்துள்ளனர். இந்த வீடியோ காண்போரை கலங்கச் செய்வதாக இருந்தது.

தாக்குதலுக்கு காரணம் என்ன?

பெண் அதிகாரியை தாக்கிய நபர் அந்த கிராமத்தின் முன்னாள் தலைவராவார். இவர் உள்ளூர் வன மேலாண்மை கமிட்டியிலும் உறுப்பினராக இருந்து வருகிறார். சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி, வனத்துறையின் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை தனது ஒப்புதல் இல்லாமல், அழைத்துச் சென்றதால் ஆத்திரமடைந்த அந்த நபர், மனைவியுடன் சேர்ந்து கொண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னிலையில் அந்த பெண் அதிகாரியை தாக்கி உதைத்துள்ளார். ஆனால் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் யாரும் இதனை தடுக்கவில்லை.

Also read:  கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பேட் நியூஸ்

பெண் அதிகாரி இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட தம்பதியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான பெண் அதிகாரிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாக்குதலால் கருவுக்கு சேதம் ஏதும் ஏற்பட்டதா என கண்டறியப்படும். அதன் முடிவை பொறுத்து தம்பதியர் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே தாக்குதலுக்கு ஆளான பெண் வனத்துறை அதிகாரியின் கணவரும் வனத்துறையில் காவலராக பணிபுரிந்து வருவதாகவும், அந்த தம்பதியர் தனது கணவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலுக்கு ஆளான பெண் அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே வனத்துறை அதிகாரி பிரவீன் அங்குசாமி என்பவர் இச்சம்பவத்தின் வீடியோ குறித்து ட்விட்டரில் பதிவிட்டு தாக்குதல் நடத்திய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவரின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான ஆதித்ய தாக்கரே இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

First published:

Tags: Forest Department, Viral Video