பிரசவத்தின்போது கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சையளித்த பெண் மருத்துவரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவர் அர்ச்சனா ஷர்மா மற்றும் அவரது கணவர் இணைந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் நேற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.
மருத்துவர் அர்ச்சனா ஷர்மா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். ஆனால், பிரசவத்தின் போது அந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அலட்சியமான மற்றும் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை...
தொடர்ந்து, கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் அர்ச்சனாவை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்தது, பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் அர்ச்சனா மீது போலீசார் லால்சோட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவ சிகிச்சையின் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் இறந்ததற்காக மருத்துவர் அர்ச்சனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்ததால் மன அழுத்தத்திற்கு உள்ளான மருத்துவர் அர்ச்சனா இன்று மருத்துவமனைக்கு மேல்மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.