• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘குழந்தையை வயிற்றில் சுமக்கிறேன்.. கடமைதான் முக்கியம்’ - கர்ப்ப காலத்தில் மருத்துவ சேவையை தொடரும் செவிலியர்

‘குழந்தையை வயிற்றில் சுமக்கிறேன்.. கடமைதான் முக்கியம்’ - கர்ப்ப காலத்தில் மருத்துவ சேவையை தொடரும் செவிலியர்

நான்சி ஆயிஷா மிஸ்திரி

நான்சி ஆயிஷா மிஸ்திரி

குஜராத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் தனது கர்ப்ப காலத்திலும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவையாற்றி வருகிறார்.

  • Share this:
    கொரோனா பெருந்தொற்று காலத்தில் எத்தனையோ முன்களப் பணியாளர்கள் மக்களுக்கான தங்களது சேவையை தொடர்ந்து வருகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வெளியில் செல்லும் சில மணி நேரங்கள் முகக்கவசம் அணியவே சங்கடப்படுகிறோம். மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதாரப்பணியாளர்களும் நாள்முழுவதும் பிபிஇ கிட்களுடன், முகக்கவசங்களுடனே நாள்களை கழிக்கின்றனர். கொரோனா தொற்று காலத்தின் ரியல் ஹீரோக்கள் இவர்கள்தான்.

    குஜராத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் தனது கர்ப்ப காலத்திலும் மக்களுக்காக சேவையாற்றி வருகிறார்.குஜராத்தை சேர்ந்த செவிலியர் நான்சி ஆயிஷா மிஸ்திரி. இந்தியாவில் கொரோனா முதலாவது அலை வீசியப்போது குஜராத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சேவையாற்றினார். கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை கவனித்துக்கொண்டார்.

    கொரோனா இரண்டாவது அலை நாடும் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரேநாளில் 158 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தொடர்ந்து மக்களுக்கான பணியை செய்து வருகிறார். ஆனால் இந்த முறை நான்சி ஆயிஷா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். மகப்பேறு காலத்தை காரணம் காட்டி இந்தபெருந்தொற்று காலத்தில் இந்த பணியில் இருந்து தன்னை விடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவரது மனம் இதற்கு இடம்கொடுக்கவில்லை. இஸ்லாமியரான இவர் இது ரமலான் மாதம் என்பதால் நோன்பு கடைப்பிடித்து வருகிறார். தினமும் 8 முதல் 10 மணிநேரம் நோயாளிகளை கவனித்துக்கொள்கிறார்.

    “ என் குழந்தையை நான் வயிற்றில் சுமக்கிறேன். ஆனால் என்னுடைய கடமைதான் எனக்கு மிகவும் முக்கியம். கடவுளின் அருளால் இந்த புனித ரமலான் மாதத்தில் நோயாளிகளுக்கு சேவை செய்யும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். நான் ஒரு செவிலியராக என்னுடைய பணியை செய்து வருகிறேன். மக்களுக்கு சேவை செய்வதை கடவுளை வணங்குவதாக கருதுகிறேன்” என்கிறார் நான்சி ஆயிஷா மிஸ்திரி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: