சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தப்பிச்சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளாவில் காசர்கோடு அருகே கோட்டச்சேரி பகுதியில் உள்ள உணவகத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த உணவகத்தில் வளர்த்து வரப்பட்ட அந்த ஆடு 4 மாத சினையாக இருந்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிழமை நள்ளிரவு 1.30 மணி அளவில், அந்த ஆடு கதறும் சத்தம் கேட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக ஆடு நள்ளிரவில் சத்தம் போடுவதை கேட்டு அந்த உணவகத்தை சேர்ந்த மற்ற ஊழியர்கள் எழுந்துச்சென்ற பார்த்துள்ளனர். அப்போது, மூன்று பேர் சேர்ந்து அந்த சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும், மற்ற ஊழியர்கள் வருவதை அறிந்து 3 பேரும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.
25 வயது இளம்பெண்ணை மணந்த 45 வயது நபருக்கு நேர்ந்த சோகம்!
அதில், ஒருவரை மட்டும் ஊழியர்கள் விரட்டிச்சென்று பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பிச்சென்றுள்ளனர். படிபட்ட நபர் அதே உணவகத்தில் பணிபுரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்த செந்தில் என்பவர் ஆவார். இதையடுத்து, செந்திலை போலீசாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து, தப்பிச்சென்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும், விலங்குகள் வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
4 மாத சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.