அன்னாசி பழத்தில் வெடி மருந்து... கர்ப்பிணி யானை பலி - நெஞ்சை உலுக்கும் நிகழ்வு

கேரளாவில் காட்டு யானை ஒன்று கோரமான முறையில் உயிரிழந்துள்ளது

அன்னாசி பழத்தில் வெடி மருந்து... கர்ப்பிணி யானை பலி - நெஞ்சை உலுக்கும் நிகழ்வு
உயிரிழந்த யானை
  • News18
  • Last Updated: June 3, 2020, 7:12 AM IST
  • Share this:
கேரளா என்றாலே நினைவுக்கு வரும் ஒரு விஷயம் யானைகள். வீடுகளில் வளர்க்கும் அளவுக்கு யானை - மனித பந்தம் அங்கு அதிகம். இந்த நிலையில், அங்கு ஒரு யானை கொடூரமாக கொல்லப்படுள்ள சம்பவம் வனத்துறை அதிகாரியால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த வாரம் பாலக்காடு பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்து இருந்தது. யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட, நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில், யாரோ வெடி பொருட்கள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக தந்துள்ளனர். நம்பி வாங்கி உண்ட யானை, பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடிக்க, அதன் வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை ஈனும் நிலையில் யானை இருந்தது.
வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் யானை யாரையும் தாக்கவில்லை, எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தவில்லை. வெடிபொருள் வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து அந்த யானை உயிரிழந்துள்ளது.

காயத்தின் மீது ஈ உள்ளிட்ட பூச்சிகள் அண்டாமல் இருக்க, யானை ஆற்றில் நின்று தண்ணீரை வாயில் தெளித்துக்கொண்டே இருந்துள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் சுரேந்திரன், நீலகந்தன் என்ற இரு கும்கி யானைகளை அழைத்துசென்று, கர்ப்பிணி யானையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கர்ப்பிணி யானை இறந்த நிலையில் இருந்துள்ளது.இதனை அடுத்து, அப்பகுதியிலேயே யானையை அதிகாரிகள் இறுதி மரியாதை செய்து எரியூட்டியுள்ளனர். வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணனின் இந்த பேஸ்புக் பதிவு வைரலாக பரவி வருகிறது.


First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading