லேண்ட்லைன் போன்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு முறை விரைவில் அமலாகிறது. இன்னும் சில நாட்களில் லேண்ட் லைன் போனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள குறிப்பிட்ட எண்ணுக்கு முன்னால் '0' சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஜனவரி 15ம் தேதி முதல் ஃபிக்ஸ்ட் லைன் அல்லது லேண்ட்லைன்களில் இருந்து ஸ்மார்ட் போன்களுக்கு அழைக்கும் போது போன் எண்களுக்கு முன்னால் '0' இணைத்து தொடர்பு கொள்வது கட்டாயமாகிறது என்று தொலைத்தொடர்பு துறை கூறியுள்ளது.
இந்த துறையின் கட்டுப்பாட்டு அமைப்பான TRAI வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஃபிக்ஸ்ட் லைன் மற்றும் போன்களுக்கான எண்களை வழங்குவதில் இருக்கும் சிக்கல்களை களைய இந்த முறை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஜனவரி 15 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. '0' இல்லாமல் அழைப்புகளை விடுக்கும் நபர்களுக்கு ஜீரோவை சேர்க்குமாறு அறிவிப்பு வழங்கப்படும்.
இண்டெர் சர்க்கிள் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வருவதற்கு முன்பு வெளி வட்டங்களில் இருக்கும் நபர்களுக்கு '0' பதிவிட்டு பின்னர் அழைப்பு விடுக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. ஆனாலும் ஜனவரி 15ம் தேதியில் இருந்து மொபைல் – மொபைல் அழைப்புகளுக்கான முறையில் மாற்றம் ஏதும் இருக்காது.
மீண்டும் '0' மறு அறிமுகம் செய்ய காரணம் :
இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண்கள் திட்டம் உள்ளது. மேலும் 0 மற்றும் 1ல் துவங்கும் எண்களுக்கு சிறப்பு நோக்கங்கள் இருக்கின்ற காரணத்தால், கோட்பாட்டளவில் மொத்தம் 800 கோடி எண்களை இந்த எண்ணை கொண்டு வழங்க முடியும். இது வரை இந்தியாவில் 9ம் எண்ணில் இருந்து தொடங்குமாறு தான் அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8, 7, 6 காம்பினேசன்களிலும் எண்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த சேர்க்கைகளுடன் சேர்த்து 115 கோடி செல்போன் எண்கள் கிடைக்கின்றன. எண் 9-ல் துவங்கும் அனைத்து எண்களும் பயன்படுத்தப்பட்டுவிட்டது. பிற எண்களில் தொடங்கி லேண்ட்லைன் போன்களுக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திட்டங்களுடன் ஒன்றுடன் ஒன்று ஓவர்லேப் ஆகும் பிரச்சனைகளும் உள்ளது. எனவே, போதுமான எண்ணிக்கை சேர்க்கைகளை உருவாக்க, '0' என்ற முன்னொட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் மொபைல் எண்களின் சந்தாவுக்கு கூடுதலாக, SIM கார்டுகளும் இயந்திரத்திலிருந்து இயந்திரத்திற்கு தொடர்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
லேண்ட்லைன் போன்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு முறை விரைவில் அமலாகிறது. லேண்ட்லைன் எனப்படும் தரைவழி போன் எண்களில் இருந்து அலைபேசி (மொபைல்) எண்களை அழைத்துப் பேசுவதற்கு, இதுவரை குறிப்பிட்ட 10 இலக்க மொபைல் எண்ணை மட்டுமே அழுத்திப் பேசினால் போதுமானதாக இருந்தது.
புதிய முறையை அமல்படுத்த ஜனவரி 1ம் தேதிக்குள் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு தொலைத் தொடர்புத் துறை சமீபத்தில் டெல்கோஸைக் கேட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
தொலைதொடர்பு சேவைகளுக்கு போதுமான எண்ணிக்கையிலான இடத்தை உருவாக்குவதற்காக, அத்தகைய அழைப்புகளுக்கு '0' முன்னொட்டு வைத்திருக்க வேண்டும் என்ற துறை ஒழுங்குபடுத்தும் TRAIன் பரிந்துரையை தொலைத்துறை ஏற்றுக்கொண்டது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்த ஆண்டு மே மாதம் ஒரு நிலையான எண்ணிலிருந்து மொபைல் எண்ணுக்கு அழைப்பதற்கு '0' என்ற முன்னொட்டை டயல் செய்ய பரிந்துரைத்தது. ஆகஸ்ட் 31, 2020 நிலவரப்படி இந்தியாவில் 114.79 கோடி வயர்லெஸ் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். ஒரு பக்கம் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்க மறுபுறம், லேண்ட்லைன் சந்தாக்கள் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. சில எண் தொடர்கள் பிரத்யேகமாக லேண்ட்லைன் ஆப்ரேட்டர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.