பாலகோட் தாக்குதலால் கர்நாடகாவில் பாஜகவுக்கு 22 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் - எடியூரப்பா

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஊடுருவிய இந்திய விமானப்படை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

பாலகோட் தாக்குதலால் கர்நாடகாவில் பாஜகவுக்கு 22 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் - எடியூரப்பா
எடியூரப்பா
  • News18
  • Last Updated: February 28, 2019, 7:18 AM IST
  • Share this:
பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா பேசியுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஊடுருவிய இந்திய விமானப்படை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பயங்கவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, நேற்று இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானப்படை குண்டுகளை வீசிச்சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்திய விமானி ஒருவரை கைது செய்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, “பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கும்” என்று பேசியுள்ளார்.

மேலும், பாலகோட் தாக்குதலால் நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான அலை வீசுகிறது. இது மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also See...
First published: February 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading