போட்டியிடும் தொகுதிகளை அறிவித்த பிரவின் தொகாடியா! பா.ஜ.கவுக்கு சிக்கலா?

சமீபத்தில் இந்துஸ்தான் நிர்மாண் தளம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.

news18
Updated: March 26, 2019, 9:33 PM IST
போட்டியிடும் தொகுதிகளை அறிவித்த பிரவின் தொகாடியா! பா.ஜ.கவுக்கு சிக்கலா?
பிரவீன் தொகாடியா
news18
Updated: March 26, 2019, 9:33 PM IST
புதிய கட்சியைத் தொடங்கியுள்ள வி.ஹெச்.பி முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, உத்தரப் பிரதேசத்தில் அவரது கட்சி போட்டியிடவுள்ள 16 தொகுதிகளின் பெயர்களை அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் தொகாடியா, இந்துத்துவ அமைப்புகளில் ஒன்றான விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு கடும் நெருக்கடி அளித்துவந்தார்.

சமீபத்தில் இந்துஸ்தான் நிர்மாண் தளம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார். இந்தநிலையில், உத்தரப் பிரதேசத்தில் அவரது கட்சி போட்டியிடவுள்ள 16 தொகுதிகளின் பெயர்களை இன்று அறிவித்தார்.

இதுதொடர்பாக தெரிவித்த பிரவீன் தொகாடியா, ‘சாண்டவ்லி, அலிகார், கைரானா, பெரோசாபாத், பெரெய்லி, லக்மிபூர் கெரி, உன்னாவ், ஜான்சி, ஹமீர்பூர், பிரதாப்கர், பஸ்தி, லால்கஞ்ச், ஜான்பூர், படோனி மற்றும் சாலம்பூர் உள்ளிட்ட 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். மேலும், குஜராத் மாநிலத்தின் 9 தொகுதிகளிலும், ஒடிஷா மாநிலத்தின் 5 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார். பிரவீன் தொகாடியா, தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளதால் பா.ஜ.கவின் வாக்கு வங்கி சிறிய அளவில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

Also see:

First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626