இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றியதற்கு நன்றி..! - பிரஷாந்த் கிஷோர்

இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றியதற்கு நன்றி..! - பிரஷாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்
  • Share this:
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்துவரும் நிலையில் தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 21 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 52 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் ஆம் ஆத்மி, மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியமைக்கிறது.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பரப்புரை வியூகங்களை வகுத்து கொடுத்திருந்த தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், ”இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றியதற்கு நன்றி” என்று ட்விட் செய்துள்ளார்.Also See...
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்