Home /News /national /

காங்கிரஸ் கட்சியில் சேராதது ஏன் - பிரசாந்த் கிஷோர் விளக்கம்

காங்கிரஸ் கட்சியில் சேராதது ஏன் - பிரசாந்த் கிஷோர் விளக்கம்

பிரஷாந்த் கிஷோர் - ராகுல் காந்தி

பிரஷாந்த் கிஷோர் - ராகுல் காந்தி

Prashant Kishor : ஏற்கனவே 2017 உ.பி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியபோது அந்த அனுபவம் மோசமாக இருந்தது. எனவே எனக்கு காங்கிரஸ் மீது சந்தேகம் இருந்தது. என் கைகள் கட்டப்பட்ட நிலையில் என்னால் பணியாற்ற முடியாது.

    காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென அக்கட்சியில் சேராமல் பின் வாங்கியது ஏன் என்பது குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார்.

    கடந்த ஆண்டு மத்தியில் நடைபெற்ற மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் பணியாற்றியது. இதன் பின்னர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல சோனியா, ராகுல், பிரியங்கா போன்ற தலைவர்களை டெல்லியில் சந்தித்து அவர் பேசிய நிலையில் திடீரென அக்கட்சியில் இணையாமல் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

    தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் குறித்து என்.டி.டி.வி தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இணைவதற்காக 2 ஆண்டுகளாக பேசி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Also read:  பாஜகவின் மிகப்பெரிய பலம் - ரகசியத்தை உடைத்த பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோர் பேசியதாவது, “மேற்குவங்க தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் 5 மாதமாக காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்த பேச்சுவார்த்த மிக தீவிரமாக நடந்தது. மே - செப்டம்பர் காலகட்டத்தில் எனது ஒவ்வொரு நிமிடத்தையும் அதற்காக செலவிட்டேன். மற்றவர்களை பொறுத்தவரையில் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் ஒன்றாக பணியாற்றுவதற்கு இரண்டு தரப்பும் ஒருவர் மீது மற்றொருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அது காங்கிரஸுடன் நடக்கவில்லை.

    என்னுடைய தரப்பை எடுத்துக் கொண்டால், நான் ஏற்கனவே 2017 உ.பி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியபோது அந்த அனுபவம் மோசமாக இருந்தது. எனவே எனக்கு காங்கிரஸ் மீது சந்தேகம் இருந்தது. என் கைகள் கட்டப்பட்ட நிலையில் என்னால் பணியாற்ற முடியாது.

    Also read:  '2024ல் பாஜகவை வீழ்த்த முடியும்.. ஆனால்..' - புள்ளிவிவரத்துடன் பேசிய பிரசாந்த் கிஷோர்

    என்னுடைய பின்புலத்தை கருதி காங்கிரஸுக்கும் என் மீது 100% நம்பிக்கை கிடையாது. நான் காங்கிரஸில் இணைய விரும்பியதற்கு ஒரு குறிப்பிட்ட தேர்தல் மட்டும் காரணமல்ல. அது காங்கிரஸை மீண்டும் மீட்கச் செய்வதற்கானது. காங்கிரஸ் கட்சியை நான் மதிக்கிறேன். காங்கிரஸ் இல்லாமல் ஒரு பயனுள்ள எதிர்க்கட்சி சாத்தியமில்லை. அதற்காக இதே தலைமையின் கீழ் இருக்கக் கூடிய காங்கிரஸை நான் குறிப்பிடவில்லை. பாஜகவை வீழ்த்த காங்கிரஸை புணரமைக்கப்பட வேண்டும்.

    திரிணாமுல் காங்கிரஸுடன் சேர்ந்தது காங்கிரஸை பழிவாங்கவே என பலரும் நினைக்கிறார்கள். வலிமையான காங்கிரசை பழிவாங்கும் அளவு பெரியவன் நான் கிடையாது. நான் மிகச் சிறியவன். காங்கிரஸை வலுவிழக்கவிடக் கூடாது. ஜனநாயகம் தழைக்க காங்கிரஸ் தேவை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: BJP, Congress, Prashant Kishor

    அடுத்த செய்தி