ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவது உறுதியாகி விட்டதாக தகவல்… என்ன பொறுப்பு என்பதை சோனியா முடிவு

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவது உறுதியாகி விட்டதாக தகவல்… என்ன பொறுப்பு என்பதை சோனியா முடிவு

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் வகுத்துள்ள உத்திகள் நடைமுறையில் சாத்தியப்படுபவை என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிரபல தேர்தல் பிரசார வல்லுனரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது உறுதியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பதை கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்கிறார். ஏற்கனவே சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை பிரசாந்த் கிஷோர் 4 முறை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் குறித்தும், 2024-ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியிடம் அறிக்கையை அளித்துள்ளார். இதனை ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைத்துள்ள சோனியா, பிரசாந்த் கிஷோரின் உத்திகளை கவனத்தில் கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் இணைவதாக பிரசாந்த் கிஷோர் கூறி வந்த நிலையில், அவர் கட்சியில் இணைவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு கட்சியில் என்ன பொறுப்பு அளிக்கப்படும், அந்த பொறுப்புக்கு உண்டான அதிகாரம் உள்ளிட்டவற்றை சோனியா காந்திதான முடிவு செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - திருமண விருந்தில் எச்சில் துப்பி ரொட்டி சுட்ட சமையல்காரர்... அதிர்ச்சி தரும் வீடியோ

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்காகவும், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்காகவும், தமிழ்நாட்டில் திமுகவுக்காகவும் பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணியாற்றியிருந்தார். இவர்கள் அனைவரது கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தின்போது பிரசாந்த் கிஷோர் சில தேர்தல் உத்திகளை தெரிவித்துள்ளார். இவை நடைமுறையில் சாத்தியப்படுபவை என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது பாஜகவுக்காக பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணியாற்றினார். இந்த தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர், அவர் எந்த தேர்தலிலும் பாஜகவுக்காக பணியாற்றவில்லை.

Published by:Musthak
First published:

Tags: Prashant Kishor