ஹோம் /நியூஸ் /இந்தியா /

காந்தி பிறந்த நாளில் 3,000 கிமீ பாதயாத்திரை தொடக்கம்.. பீகார் அரசியலுக்கு அடித்தளம் போடும் பிரசாந்த் கிஷோர்!

காந்தி பிறந்த நாளில் 3,000 கிமீ பாதயாத்திரை தொடக்கம்.. பீகார் அரசியலுக்கு அடித்தளம் போடும் பிரசாந்த் கிஷோர்!

3,000 கிமீ நடைபயணத்தை தொடங்கியுள்ளார் பிரசாந்த் கிஷோர்

3,000 கிமீ நடைபயணத்தை தொடங்கியுள்ளார் பிரசாந்த் கிஷோர்

பீகார் மாநில அரசியலில் நேரடியா களமிறங்கும் நோக்கில் சுமார் 12-15 மாதங்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Bihar, India

  பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீகார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறியும் நோக்கில், மாநிலம் முழுவதும் பாத யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியான இன்று காந்திக்கு வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு சம்பரான் மாவட்டத்தில் தனது 3,000 கிமீ நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

  1917ஆம் ஆண்டில் இந்த சம்பாரான் பகுதியில்தான் இந்தியாவில் தனது முதல் சத்தியாகிரக போராட்டத்தை அண்ணல் காந்தி நடத்தினார். இதை கருத்தில் கொண்டு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிஸ்திஹாவ்ரா காந்தி ஆசிரமத்தில் காந்திக்கு மரியாதை செலுத்தி தனது சத்தியாகிரக பயணத்தை பிரசாந்த் கிஷோர் தொடங்கியுள்ளார்.

  கடந்த சில மாதங்களாகவே பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் முன்னணி தேர்தல் வியூக நிபுணராக ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் திகழ்ந்து வருகிறார். பாஜக தொடங்கி, காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமதி வரை பல கட்சிகளுக்கு இவர் தேர்தல் வியூகங்கள் அமைத்து தந்து அதில் பல வெற்றியையும் கண்டுள்ளார்.

  அத்துடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் 2018ஆம் ஆண்டு இணைந்த பிரசாந்த் கிஷோர், 2020ஆம் ஆண்டு நிதிஷ் குமாரால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். சமீப காலமாக இவர், தேர்தல் வியூக பணிகளை குறைத்துக் கொண்டு நேரடி மக்கள் பணியில் களமிறங்க விரும்புவதாக தெரிவித்து வந்தார்.

  இதையும் படிங்க: காந்தி சிலையில் அழுக்கு.. கைக்குட்டையால் சுத்தம் செய்த பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி - வீடியோ

  அதற்கு அடித்தளமாகவே இந்த மாநிலும் தழுவிய நடைபயணத்தை அவர் தொடங்கியுள்ளார். சுமார் 12-15 மாதங்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தின் அனைத்து கிராமங்கள் மூளை முடுக்குகளுக்கு சென்று மக்களின் அடிப்படை சிக்கல்களை கண்டறிந்து அதை ஜனநாயக தளத்திற்கு கொண்டுவருவதே இந்த நடைபயணத்தின் நோக்கம் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Gandhi, Gandhi Jayanti, Prashant Kishor