Home /News /national /

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர மறுப்பு..!!

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர மறுப்பு..!!

ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர்

ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர்

Prashant kishor | 2024ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள முக்கிய பொறுப்பு வழங்குவதாக பிரசாந்த் கிஷோரிடம் காங்கிரஸ் கட்சி தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி வழங்கிய வாய்ப்பை பிரசாந்த் கிஷோர் நிராகரித்துள்ளார்.

    பிரபல தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கடந்த சில நாள்களாக காங்கிரஸ் கட்சி மேலிடம், முன்னிலைத் தலைவர்களுடன் தொடர் சந்திப்பில் ஈடுபட்டுவந்தார். பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படுவது தொடர்பாகவே இந்த சந்திப்பானது நடைபெற்றது என செய்திகள் வெளியாகின. ஒரு கட்டத்தில் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைப்பதற்கு மேலிடம் சம்மதம் தெரிவித்ததாகவும், இதையடுத்து காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் சேர்வது உறுதி எனவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவேலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரந்தீப் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரசாந்த் கிஷோர் பல்வேறு அறிக்கைகளை தந்த நிலையில், 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு செயற்குழு ஒன்றை கட்சித் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். அதில் முக்கிய பொறுப்புடன் இணைந்து கொள்ள சோனியா காந்தி அழைப்பு விடுத்தார். ஆனால், இதை பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். அவரது முயற்சி மற்றும் யோசனைகளை கட்சி பாராட்டுகிறது என ட்வீட் செய்துள்ளார்.



    இந்நிலையில், ரந்தீப் சிங் பதிவைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பிரசாந்த் கிஷோரும் ட்வீட் செய்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சி எனக்கு பெருந்தன்மையுடன் அளித்த தேர்தல் பொறுப்பை நான் வேண்டாம் என மறுத்துள்ளேன்.எனது தாழ்மையான எண்ணத்தின்படி, கட்சிக்கு எனது தேவையை விட, கட்டமைப்பு ரீதியாக ஆழமாக உள்ள பிரச்னைகளை சீர்திருத்த வலிமையான தலைமை தான் தேவை என கருதுகிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.



    முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேரப்போவது உறுதி என தகவல் வெளியான நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்ற பிராசந்த் கிஷோர் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்து, வரப்போகும் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரியா சமிதி கட்சிக்காக பணிபுரிய ஒப்பந்தம் செய்தார்.ஒரு பக்கம் காங்கிரசுடன் பேசிவிட்டு மறு பக்கம் இப்படி சந்திரசேகர ராவிடம் பிரசாந்த் கிஷோர் டீல் ஓகே செய்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.



    இதையும் படிங்க: நிலக்கரி பற்றாக்குறை... 12 மாநிலங்களில் பல மணி நேரம் மின்வெட்டு - இருளில் மூழ்குமா இந்தியா?

    "காங்கிரஸ் கட்சி தற்போது காலாவதி ஆகிவிட்டது. அதை மீண்டும் சீர் செய்வதற்கு வாய்ப்பில்லை. எனவே எனது பார்வையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர்வது பெரும் தவறு" என சந்திரசேகர ராவின் மகனும், மாநில அமைச்சருமான கேடி ராமா ராவ் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்துவிட்டார் என அக்கட்சியே தற்போது தெரிவித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Congress, Congress party, Prashant Kishor, Rahul gandhi, Telangana

    அடுத்த செய்தி