ஹோம் /நியூஸ் /இந்தியா /

நிதீஷ்குமார் தற்போதும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார்- பிரசாந்த் கிஷோர் பகீர் குற்றச்சாட்டு

நிதீஷ்குமார் தற்போதும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார்- பிரசாந்த் கிஷோர் பகீர் குற்றச்சாட்டு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தேசிய கூட்டணியை தீவிரமாக உருவாக்கி வருகிறார் நிதிஷ்குமார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள், அவர் பாஜகவுடன்  தொடர்பில் இருப்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவார்கள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Bihar, India

  பாஜகவுடன் தற்போதும் நிதீஷ் குமார் தொடர்பில் உள்ளதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் அவர் அக்கட்சியுடன் கைக்கோர்ப்பார் என்றும் தேர்தல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

  பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீகார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறியும் நோக்கில், மாநிலம் முழுவதும் பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இன்றைய தினம் பாத யாத்திரையின்போது பிடிஐ ஊடகத்திற்கு பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்தார்.

  அப்போது அவர், ‘பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தேசிய கூட்டணியை தீவிரமாக உருவாக்கி வருகிறார் நிதிஷ்குமார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள், அவர் பாஜகவுடன்  தொடர்பில் இருப்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவார்கள். அவர் தனது கட்சி எம்பியும், ராஜ்யசபா துணைத் தலைவருமான ஹரிவன்ஷ் ஜி மூலம் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார் என்று தெரிவித்தார்.

  இதன் காரணமாகவே ஹர்வன்ஷ் அவரது எம்பி பதவியை ராஜினாமா செய்ய கோரப்படவில்லை என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். சூழல்கள் ஏற்படும்போதெல்லாம் மீண்டும் பாஜகவுக்குச் சென்று அவருடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

  முன்னதாக, பாஜகவுடனான கூட்டணி அமைத்து பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியமைத்தது. நிதீஷ் குமார் முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். பின்னர் இருகட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு, பாஜக கூட்டணியை முறித்துகொண்ட நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து,  ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றுகொண்டார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Bihar, Nitish Kumar, Prashant Kishor