Home /News /national /

இப்போதைக்கு தனிக்கட்சி இல்லை - 3,000 கிமீ பாதயாத்திரை திட்டத்தை அறிவித்தார் பிரசாந்த் கிஷோர்

இப்போதைக்கு தனிக்கட்சி இல்லை - 3,000 கிமீ பாதயாத்திரை திட்டத்தை அறிவித்தார் பிரசாந்த் கிஷோர்

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி 3,000 கிமீ பாதயாத்திரை பயணத்தை தொடங்கவுள்ளேன் என பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி 3,000 கிமீ பாதயாத்திரை பயணத்தை தொடங்கவுள்ளேன் என பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி 3,000 கிமீ பாதயாத்திரை பயணத்தை தொடங்கவுள்ளேன் என பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

    பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் புதிதாக தனிக்கட்சி தொடங்கப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வந்தது. இது தொடர்பாக சில சமிக்ஞைகளை அவரே ட்விட்டரில் தெரிவித்திருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக தனது பொதுப் பணி மறைமுகமாக இருந்தநிலையில், நேரடி பொதுப் பணிக்கு விரைவில் களமிறங்கவுள்ளேன். இதன் தொடக்கம் பிகாரில் இருந்து என்ற அர்த்தத்தில் ட்வீட் செய்திருந்தார்.

    இதையடுத்து பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிகாரில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய பிரசாந்த் கிஷோர், நான் கட்சி தொடர்பான அறிவிப்பை ஏதும் வெளியிடப் போவதில்லை. கடந்த ஐந்து மாதங்களில் சுமார் 17,000க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். கடந்த மூன்று நாள்களில் மட்டும் 150 பேரிடம் பேசினேன். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதத்தில் மேலும், 17,000 முதல் 18,000 மக்களை சந்தித்து 'மக்கள் நல்லாட்சி' திட்டம் குறித்து பேசவுள்ளேன்.

    கடந்த 30 ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோரின் ஆட்சி பிகாரை மிகவும் பின்னடைந்த மாநிலமாக உருவாக்கியுள்ளது. சமூக நீதி மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக இரு கட்சிகளும் தங்களை கூறிவந்தாலும், யதார்த்தம் இதுதான். எனவே, பிகார் மக்கள் புதிய எண்ணத்தையும், புதிய முயற்சியையும் கைக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் மாநிலம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது.

    எனவே, பிகார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிய உள்ளேன். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி 3,000 கிமீ பாதயாத்திரை பயணத்தை தொடங்கவுள்ளேன் என்றார்.பிகாரில் தற்போதைக்கு தேர்தல் ஏதும் இல்லை. தேர்தல் தான் எனது நோக்கம் என்றால் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆறு மாதம் முன்னர் கட்சி தொடங்கி போட்டியிட்டிருக்கலாம். எனவே, மக்கள் தொடர்பே எனது நோக்கம்.

    இதையும் படிங்க: தந்தையின் கடைசி ஆசை.. ரூ1.5 கோடி மதிப்பிலான இடத்தை இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கிய இந்து சகோதரிகள்

    பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் சுமார் இரண்டு வருடம் துணை தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், இவரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், அது தோல்வியில் முடிந்தது. இவர் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் டிஆர்எஸ் கட்சிக்கு அடுத்த தேர்தலில் வேலை பார்க்க அன்மையில் ஒப்பந்தம் செய்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bihar, Politics, Prashant Kishor

    அடுத்த செய்தி