முகப்பு /செய்தி /இந்தியா / ஒரு ரூபாய் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம் - கையில் ஒரு ரூபாயுடன் புகைப்படம் பதிவிட்ட பிரசாந்த் பூஷன்

ஒரு ரூபாய் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம் - கையில் ஒரு ரூபாயுடன் புகைப்படம் பதிவிட்ட பிரசாந்த் பூஷன்

பிரசாந்த் பூஷன்

பிரசாந்த் பூஷன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்த நிலையில், ஒரு ரூபாயுடன் பிரசாந்த் பூஷன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே மற்றும் நீதிமன்ற செயல்பாடுகளை டுவிட்டரில் விமர்சித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்தது. இதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கருத்துக்கு மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தியது.

ஆனால், அதற்கு பிரசாந்த் பூஷன் மறுத்துவிட்ட நிலையில், தண்டனை விவரம் குறித்த அறிவிப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. ₹ 1 அபராதம் கட்ட வேண்டும் என்றும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ₹1 ரூபாய் கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரியத் தடை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கையில் ஒரு ரூபாயுடன் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு வந்தவுடன் என்னுடைய வழக்கறிஞரும் மூத்த சக பணியாளருமான ராஜீவ் தவான் உடனடியாக ஒரு ரூபாய் வழங்கினார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: Prashanth bushan