பிரசாந்த் பூசனுக்கு ₹ 1 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - கட்டத்தவறினால் 3 மாதம் சிறை

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரசாந்த் பூசனுக்கு ₹ 1 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - கட்டத்தவறினால் 3 மாதம் சிறை
பிரசாந்த் பூஷன்
  • News18
  • Last Updated: August 31, 2020, 12:20 PM IST
  • Share this:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே மற்றும் நீதிமன்ற செயல்பாடுகளை டுவிட்டரில் விமர்சித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்தது.

இதில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கருத்துக்கு மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தியது. Also read... 'கடன் பெறுபவர்களை அடையாளம் காணுதல்...' வங்கி அதிகாரிகளுடன் நிர்மலா சீதாரமன் நடத்த உள்ள ஆலோசனைஆனால், அதற்கு பிரசாந்த் பூஷன் மறுத்துவிட்ட நிலையில், தண்டனை விவரம் குறித்த அறிவிப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.


₹ 1 அபராதம் கட்ட வேண்டும் என்றும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ₹1 ரூபாய் கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரியத் தடை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading