Home /News /national /

பிரசாந்த் கிஷோர் ட்வீட்டால் வந்த வினை.. மம்தாவை விமர்சித்த காங்கிரஸ்.. ராகுலை விமர்சித்து திரிணாமுல் பதிலடி!

பிரசாந்த் கிஷோர் ட்வீட்டால் வந்த வினை.. மம்தாவை விமர்சித்த காங்கிரஸ்.. ராகுலை விமர்சித்து திரிணாமுல் பதிலடி!

Prashant kishor - rahul gandhi

Prashant kishor - rahul gandhi

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்ததை பூபேஷ் பாகெல் மறைமுகமாக விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் கட்சியை பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக சாடி ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையேயான உறவில் விரிசல் விழும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தி அமேதியில் பெற்ற வரலாற்று தோல்வியை திரிணாமுல் காங்கிரஸ் நினைவுபடுத்தி கிண்டல் அடிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்தியாவின் பிரபல தேர்தல் வியூக நிபுணராக விளங்குபவர் பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர். இவர் கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வெற்றி பெற உதவியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பெற்ற வியக்கத்தக்க வெற்றியை அடுத்து, பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்து வந்தார். சோனியா, ராகுல், பிரியங்கா போன்றோருடன் அவர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரசாந்த் கிஷோருக்கு காங்கிரஸில் பெரிய பதவி கொடுக்க முயற்சிகள் நடப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

புயலை கிளப்பிய பிரசாந்த் கிஷோர்:

ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்து நேற்று (அக்டோபர் 8) பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

“லக்கிம்பூர் சம்பவத்துக்கு பிறகே எதிர்க்கட்சிகள் பழம்பெரும் கட்சியின் (காங்கிரஸ்) தலைமையில் விரைவாக, தானாக மீண்டெழ வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் இதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்க உள்ளது. பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்சனைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க தீர்வு எதுவும் கிடைக்கவில்லை” என்று அவர் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடியிருந்தார்.

Also Read: தலைதூக்கும் மின்வெட்டு ஆபத்து.. தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. சமாளிக்குமா அரசு?

மம்தாவை விமர்சித்து பூபேஷ் பாகெல் பதிலடி:

காங்கிரஸை விமர்சித்தற்காக பிரசாந்த் கிஷோருக்கு உடனடியாக ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவரும், சட்டீஸ்கர் மாநில முதல்வருமான பூபேஷ் பாகெல்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சொந்த தொகுதியில் கூட வெல்ல முடியாத காங்கிரஸ் தலைவர்களை வளைத்துப் போட்டு தேசிய அளவில் மாற்று சக்தியாக விளங்க நினைப்பவர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். துரதிருஷ்டவசமாக, ஒரு தேசிய மாற்றாக வருவதற்கு, ஆழ்ந்து வேரூன்றிய மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை, ஆனால் அவர்களிடம் விரைவான தீர்வுகள் இல்லை.” இவ்வாறு பூபேஷ் பாகெல் தெரிவித்திருந்தார்.

சமீபத்திய மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்ததை பூபேஷ் பாகெல் மறைமுகமாக விமர்சித்து அவ்வாறு பதிவிட்டிருந்தார்.

Also Read:  இந்திய அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஜாக்பாட் – ரமீஸ் ராஜா வெளியிட்ட ரகசியம்

ராகுலை விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்:

பூபேஷ் பாகெல் மம்தாவை விமர்சித்ததற்கு பதிலடியாக ராகுல் காந்தியை திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “மிகவும் மதிப்பான வார்த்தைகள் முதல் முறை முதல்வரிடம் இருந்து வந்துள்ளது. உங்கள் தகுதிக்கு மீறி செயல்படுவதால் உங்களுக்கு பெருமை வந்துவிடாது பூபேஷ் பாகெல் அவர்களே. உங்கள் கட்சி தலைமையிடம் நற்பெயர் வாங்க இப்படியெல்லாம் முயற்சிக்காதீர்கள்.

Also Read:   IMPS பரிவர்த்தனைக்கான தினசரி வரம்பு ₹ 5 லட்சம் ஆக உயர்வு! RTGS – NEFT என்ன வேறுபாடு?

அதே நேரத்தில், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி அடைந்த வரலாற்று தோல்வியை, மீண்டும் ஒரு ட்விட்டர் ட்ரெண்டிங் செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சி அழித்துவிட முயற்சிக்கிறதா” என அதில் கூறப்பட்டுள்ளது.

கோவா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாக விளங்கிய லூயிசினோ ஃபெலேரோ, காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த போது, பிரசாந்த் கிஷோர் தன்னை திரிணாமுல் காங்கிரஸில் இணைய அழைப்பு விடுத்தார் என தெரிவித்திருந்தார். இதன் பின்னரே, பிரசாந்த் கிஷோரை திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவராக காங்கிரஸ் கட்சியினர் கருத தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Congress, Mamata banerjee, Prashant Kishor, TMC

அடுத்த செய்தி