பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: எந்த முன்னேற்றமும் இல்லை - மருத்துவமனை விளக்கம்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: எந்த முன்னேற்றமும் இல்லை - மருத்துவமனை விளக்கம்
பிரணாப் முகர்ஜி
  • Share this:
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது இல்லத்தில் உள்ள கழிவறையில் நேற்று முன்தினம் இரவு விழுந்துள்ளார். தலைப்பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா இருந்தது உறுதிசெய்யப்பட்டது. மேலும், மூளையில் கட்டி இருந்தது தெரியவந்தது. இதனை அகற்றுவதற்காக நேற்று மாலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


காலையிலிருந்து அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவருகிறது. சிறிது நேரத்துக்கு முன்னர் மருத்துவமனை அறிவிப்பில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்துவருகிறது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading